நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு

கபிஸ்தலம் அருகே காவிரி-அரசலாறு தலைப்பு அணையில் நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-25 21:14 GMT

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெரு கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் ரூ.40 கோடி மதிப்பில் காவிரி- அரசலாறு தலைப்பு அணை நீர்வளத்துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், காவிரியில் இருந்து பிரியும் அரசலாற்றின் மூலம் 80 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.இந்த நிலையில் இந்த அணையை சென்னை நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் காஜாமைதீன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணையில் உள்ள ஷட்டர் பலகைகளை ஏற்றி, இறக்கி பார்த்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, தரக்கட்டுப்பாடு கோட்ட செயற்பொறியாளர் புகழேந்தி, காவிரி உபகோட்ட கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் முத்துமணி, தரகட்டுப்பாடு உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், உதவிப் பொறியாளர்கள் வெங்கடேசன், முத்துக்குமார், முகமது அப்துல்லா, அன்பழகன், பாலமுருகன் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்