காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.;

Update:2023-01-19 00:15 IST

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் கண்ணை கட்டிக்கொண்டு பானை உடைக்கும் போட்டி, இசை நாற்காலி, எலுமிச்சை ஸ்பூன், சாக்கு ஓட்டம், கோ-கோ, கபடி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அந்தந்த பகுதிகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்