சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்

சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்

Update: 2022-10-12 18:45 GMT

தலைஞாயிறு மேலத்தெருவும், சின்ன சாலையும் சந்திக்கும் இடத்தில் கடந்த சில நாட்களாக வாட்டாகுடி, உம்பளச்சேரி, சாக்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் அணைக்கரை கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த பல நாட்களாக சாலையில் வீணாக தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்டாகுடி, துளசாபுரம் ஆகிய பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அணைக்கரை கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்