ஆயுதபூஜையையொட்டி நாமக்கல்லில் 80 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரிகள் தகவல்

ஆயுதபூஜையையொட்டி நாமக்கல்லில் 80 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரிகள் தகவல்

Update: 2022-10-05 18:45 GMT

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள லாரி பட்டறைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

அதற்கு முன்னதாக தொழில் நிறுவனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டன. மேலும் பூஜைக்கு பிறகு தங்கள் நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மா இலை, பூக்கள், வாழைமரம் ஆகியவற்றையும் அகற்றி சாலையோரங்களில் கொட்டினர்.

திருஷ்டி பூசணிக்காய்கள் ஆங்காங்கே சாலைகள் மற்றும் தெருக்களில் உடைக்கப்பட்டு இருந்தன.

இதனிடையே நேற்று நாமக்கல் நகர் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இன்றும் (வியாழக்கிழமை) நகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்