கல்லாறு பகுதியில் எச்சரிக்கை பலகை
அரக்கோணம் அருகே கல்லாறு பொதுமக்களுக்காக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆறு மற்றும் ஓடைகளில் அதிகபடியான நீர் செல்கிறது. இதனால் நீர்நிலைகளை ஒட்டியுள்ள கிராம பொது மக்கள் நீர்நிலை பகுதிகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக எச்சரிக்கை பலகைகள் வைக்க அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆத்தூர் கிராமத்தில் கல்லாறு பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகையை வைத்தனர்.