லாரிகளில் தார்பாய் போட்டு மூடாமல் கட்டுமான பொருட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் தார்பாய் போட்டு மூடாமல் கட்டுமான பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-29 15:19 GMT

விழுப்புரம்,

இதுகுறித்து கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் எம்சாண்ட் தயாரிப்பாளர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்சாண்ட், ஜல்லி, டஸ்ட், சிப்ஸ் மற்றும் ஜி.எஸ்.பி. மிக்சிங் ஆகியவற்றை தார்பாய் கொண்டு மூடப்படாமல் ஏற்றிச்செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது.

எனவே இவற்றை தவிர்க்கும்பொருட்டு எம்சாண்ட், ஜல்லி, டஸ்ட், சிப்ஸ், ஜி.எஸ்.பி. மிக்சிங் ஆகியவற்றை தயாரிக்கும் கிரஷர் உரிமையாளர்கள் அனைவரும் தங்களிடம் மேற்கண்ட கட்டுமான பொருட்களை ஏற்ற வரும் வாகனங்களுக்கு தார்பாய் இருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். தார்பாய் இல்லாமல் பொருட்களை ஏற்ற வரும் வாகனங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

நடவடிக்கை

மேலும் மேற்கண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் தார்பாய் போட்டு மூடிய பிறகுதான் கிரஷர் யூனிட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என வாகன உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் வாகன உரிமையாளர், டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்