சாலையில் நடந்து சென்றமூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

தேவதானப்பட்டி அருேக சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்த மா்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-15 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ராமாயி (வயது 65). நேற்று முன்தினம் இவர், கெங்குவார்பட்டி மந்தை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ராமாயிடம் ஒரு பெயரை மட்டும் கூறி முகவரி கேட்டனர். அதற்கு அவர் எனக்கு தெரியவில்லை. ஊருக்குள் சென்று கேட்குமாறு கூறினார்.

இதையடுத்து சரி என்ற அந்த வாலிபர்கள் ராமாயியை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்றனர். ஒரு கட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை கீேழ தள்ளிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து ராமாயி தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்