விஸ்வ சாந்தி பள்ளி அணி வெற்றி
கோத்தகிரி குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விஸ்வ சாந்தி பள்ளி அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி
கேர்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், கோத்தகிரி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கோத்தகிரியில் நடந்து வருகிறது. இதில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 45 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு கால்பந்து இறுதி போட்டி நடைபெற்றது. இதில் கிரீன்வேலி பள்ளி அணியும், விஸ்வ சாந்தி பள்ளி அணியும் மோதியது. 2 அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் விஸ்வசாந்தி பள்ளி அணி 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த எரிபந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஆல்பா ஜி.கே. அணி முதலிடமும், கேர்பெட்டா அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அணி 2-வது இடமும் பிடித்தது. 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஆல்பா ஜி.கே.பள்ளி அணி முதலிடம் பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 2-வது இடம் பெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது.