விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு நேற்று தமிழகத்தில் எந்த இந்து கோவிலையும் அகற்றாமல் இருக்க கோரி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் வேண்டுதல் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவில் திருமடங்கள் மாவட்ட அமைப்பாளர் வி.மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் வேலுராஜா, பிரசார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணகுமார், விஸ்வ இந்து பரிஷ் மண்ட ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் காளியப்பன் முன்னிலையில் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் கோவில் மடங்கள் மாவட்ட இணை அமைப்பாளர் தளவாய்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.