வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு விருதுநகர் கலெக்டர் பாராட்டு
வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி அமலா மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். அந்த மாணவியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவி அமலாவிற்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டினார். இந்தநிலையில் கலெக்டர் ஜெயசீலன், மாணவி அமலாவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.