வாகனம் ஓட்டும்போது விதிமீறல்: 2,680 வழக்குகள் பதிவு; ரூ.29½ லட்சம் அபராதம் விதிப்பு

வாகனம் ஓட்டும்போது விதிமீறல்: 2,680 வழக்குகள் பதிவு; ரூ.29½ லட்சம் அபராதம் விதிப்பு.

Update: 2022-09-07 21:36 GMT

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அபாயகரமாகவும் இருப்பது கவனிக்கப்பட்டது. இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்த 3-9-2022 மற்றும் 5-9-2022 ஆகிய 2 நாட்கள் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த தணிக்கையில், அபாயகரமாக தவறான முறையில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் ரூ.29 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 2,420 வழக்குகளில் விதிமீறல்களால் அபராதம் செலுத்தப்பட்டு ரூ.26 லட்சத்து 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த தணிக்கை மேலும் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்