விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைப்பு

Update: 2023-09-18 17:16 GMT


பல்வேறு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.

சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பல்லடம், மங்கலம், திருப்பூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கு மண்டலதலைவர் (ஐ.ஜி) பவானி ஈஸ்வரி,

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .சாமிநாதன், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்

நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

சிலைகள் கரைப்பு

மேலும் நேற்று பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் ஆய்வு செய்தார். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்