கூத்தாநல்லூர் பகுதியில் கொட்டும் மழையில் விநாயகர் ஊர்வலம்

கூத்தாநல்லூர் பகுதியில் கொட்டும் மழையில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-31 16:49 GMT

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. வேளுக்குடி அச்சம் தீர்த்த விநாயகர், புனவாசல் மழுப்பெருத்த விநாயகர், பழையனூர் வெள்ளை விநாயகர், அதங்குடி சக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலங்களில் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்