விநாயகர், கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர், கிருஷ்ணன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-10 21:14 GMT


மதுரை திருப்பாலை யாதவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கோகுல விநாயகர் மற்றும் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் தமிழ் முறைப்படி வேதங்கள் ஓதப்பட்டன. இதில் ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், யாதவர் கல்லூரியின் நிர்வாகியுமான எஸ்.ராஜேஸ்வரன் கலந்து கொண்டு பேசினர். இந்த கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் நாராயணன் செய்திருந்தார். நிர்வாக அலுவலர் நீதிபதி தெய்வராஜ், கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குனர் மு.குணசேகரன், கல்லூரி நிர்வாகியின் உதவியாளர் வக்கீல் ராஜசேகரன், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்