விநாயகர் சதுர்த்தி-முகூர்த்த தினம்: மதுரை மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது.

Update: 2023-09-16 21:04 GMT


விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது.

மல்லிகை ரூ.2 ஆயிரம்

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.

நேற்றும் பூக்களின் விலை இன்னும் சற்று உயர்ந்து இருந்தது. அதாவது, . நேற்று முன்தினம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.2000 வரை விற்பனையானது.

இதுகுறித்து பூ வியபாரிகள் கூறுகையில், "இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதாலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்தும் தற்போது குறைந்து வருகிறது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது" என்றனர்.

சில நாட்களுக்கு முன்புவரை ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.600, ரூ.700 என்ற நிலையே இருந்து வந்தது. ஆனால், இப்போது விலை கிட்டத்தட்ட 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வமாக வாங்கினர்

விலை உயர்ந்தாலும் நேற்று ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கிச்சென்றனர். இதுபோல், முல்லை கிலோ ரூ.1200, பிச்சி ரூ.1000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.300 என விற்பனையானது. மல்லிகைப்பூ விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்