விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்து
பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்து
விழுப்புரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி- திருப்பதி இடையேயான பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 16854) வருகிற 16-ந் தேதியன்று காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு விழுப்புரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16853) திருப்பதி- காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியிலிருந்து மாலை 4.35 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும்.
இந்த தகவல் தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.