தூய்மை பணியில் களம் இறங்கிய விழுப்புரம் கலெக்டர்

தூய்மை பணியில் களம் இறங்கிய விழுப்புரம் கலெக்டர், பள்ளி கழிவறை வளாகத்தை சுத்தம் செய்தார்.

Update: 2022-06-11 14:13 GMT

விழுப்புரம்:

தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,806 பள்ளிகளில் நம் பள்ளி, நம் பெருமை, என் குப்பை, என் பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கியது.

இதில் விழுப்புரம் மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூய்மைப்பணி நடந்தது. இப்பணியை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை வளாகத்திற்கு சென்றார். அங்கு கைகழுவும் இடம்அசுத்தமாக இருந்தது. இதை பார்த்த கலெக்டர் மோகன், திடீரென அவரே அதனை சுத்தம் செய்ய களம் இறங்கினார். இதை ஆசிரியர்கள், பணியாளர்கள் பார்த்து வியந்தனர். இதேபோல் ஒவ்வொருவரும் தாங்கள் மேற்கொள்ளும் பணியை தூய்மையாகவும், சுத்தமாகவும் செய்து நம் வீட்டைப்போல் பாதுகாத்திட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தூய்மைப்பணி மேற்கொள்வதை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்