அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-25 19:38 GMT

பம்பப்படையூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கொட்டும் மழையில் குடைப்பிடித்தவாறு கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் வட்டம் பம்பப்படையூரில் அடிப்படை வசதி தரக்கோரி கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பம்பப்படையூர் இந்திரா நகரில் சொந்த வீடு இல்லாமல் வசித்து வருபவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். சிதிலமடைந்த வீடுகளை சீர் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

கொட்டும் மழையில் கோஷம்

சுற்றுப்புற சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சமுதாய கூடத்தை சீரமைத்து மின் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் குறைந்த மின் அழுத்தத்தை சீரமைக்க வேண்டும். மயானத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகையுடன் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்