கிராம மக்கள் ஆடு வெட்டி கொண்டாட்டம்
15 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்தனர்.
வேப்பனப்பள்ளி:-
வேப்பனபள்ளி அருகே பண்ணப்பள்ளி கிராமத்தில் தேவர்ஏரி நீர் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தேவர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரிநீர் செல்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் பண்ணப்பள்ளி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே கிராம மக்கள் ஒன்றுகூடி விளக்கு ஏந்தி மேளதாளங்களுடன் ஊர்வலமாக ஏரிக்கு வந்தனர். அங்கு ஆடு வெட்டி சிறப்பு பூஜை ெசய்தனர். பின்னர் ஏரியில் இலையில் விளக்கு விட்டு வழிபட்டனர். இதில் பண்ணப்பள்ளி, தாமரண்டரப்பள்ளி கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.