கிராம சபை கூட்டம்

சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-16 20:29 GMT

சிவகாசி,

சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சாமிநத்தம்

சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு மகாலட்சுமி பாலகுருசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செந்தில்வேல் செய்திருந்தார். ஆனைக்குட்டம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்துதலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் முத்துப்பாண்டி செய்திருந்தார்.

தீர்மானங்கள்

பூலாவூரணியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பாண்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்ட ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் சங்கிலிதாஸ் செய்திருந்தார்.

இதேபோல் நாராணாபுரம், செங்கமநாச்சியார்புரம், காளையார் குறிச்சி, வெள்ளையாபுரம், செங்கமலப்பட்டி, பெரியபொட்டல் பட்டி, வடப்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, காரிச்சேரி, வாடியூர், விளாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சிக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆலங்குளம்

ஆலங்குளம் ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டார்.

கொங்கன்குளத்தில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அப்பயநாயக்கர்பட்டியில் ஊராட்சி தலைவர் கணேஷ்குமார், வலையபட்டியில் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கீழாண்மறைநாடு பகுதியில் ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ஏ.லட்சுமிபுரம், டி. கரிசல்குளம், ப.திருவேங்கிடபுரம், நதிக்குடி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம் ஆகிய ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி தலைமையிலும், ஆத்திபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி தலைமையிலும், பந்தல்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பத்ரிநாத் தலைமையிலும், கஞ்சநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி தலைமையிலும், கட்டங்குடி ஊராட்சியில் மகாலட்சுமி தலைமையிலும், சுக்கில நத்தம் ஊராட்சியில் சோபனா தேவி தலைமையிலும், சேதுராஜபுரம் ஊராட்சியில் தங்கஅழகு தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்