கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்

கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்

Update: 2023-08-23 18:45 GMT

வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி பழயங்குடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை ஒன்றிய தலைவர் வக்கீல் ராமகிருஷ்ணன், அட்மா வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சங்கர் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ரவி வரவேற்றார். இதில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் இளவரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்