சாரதா மகாவித்யாலயம் மகளிர் கல்லூரியில் வித்யார்த்தி ஹோமம்
உளுந்தூர்பேட்டைசாரதா மகாவித்யாலயம் மகளிர் கல்லூரியில் வித்யார்த்தி ஹோமம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை சாரதா மகாவித்யாலயம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வித்யார்த்தி ஹோமம் மற்றும் பெற்றோர் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி அனந்தப்ரேமப்ரியா அம்பா தலைமை தாங்கினார். கல்லூரி இணை செயலாளர் பிரம்மச்சாரணி ப்ரேமப்ரணா மாஜி அறிமுக உரையாற்றினார். தமிழ்துறை தலைவர் முனைவர் மஞ்சு வரவேற்றார். கல்லூரி முதல்வர் பழனியம்மாள் சிறப்புரையாற்றினார். கல்லூரி வளாகத்தில் வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. இதில் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாந்தி, கணினித்துறை தலைவர் பத்மாவதி உள்பட பலர் ஒருங்கிணைத்தனர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் லட்சுமிபிரியா நன்றி கூறினார்.