துணை தலைவர், தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஒப்பந்த பணிக்கு அனுமதி வேண்டி தீர்மானம் நிறைவேற்றக்கோரி தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர், தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:
ஒப்பந்த பணிக்கு அனுமதி வேண்டி தீர்மானம் நிறைவேற்றக்கோரி தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர், தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதாரண கூட்டம்
தலைஞாயிறு பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கதிரவன், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு அனுமதி வேண்டி தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் கொண்டு வர தலைவர் செந்தமிழ்ச்செல்வி அனுமதிக்கவில்லை.
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கதிரவன் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் மல்லிகா, கிருத்திகாதேவி, வீரச்செல்வி, அப்துல் அஜீஸ், அஜய்ராஜா, மாதவன் ஆகிய உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற கூடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திடீரென மீண்டும் பேரூராட்சி கூட்டத்தில் ஒப்பந்த பணிக்கு அனுமதி வேண்டி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 உறுப்பினர்களும், தி.மு.க.வைச் சேர்ந்த வீர செல்வி, முத்துலட்சுமி ஆகிய 2 உறுப்பினர்களும் என ெமாத்தம் 7 பேரும் சேர்ந்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
பரபரப்பு
தி.மு.க. உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 2 பேர் வாக்களித்ததும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதும் தலைஞாயிறு பேரூராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.