சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு வேட்டி, சேலை

சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-30 12:10 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், கலவை, நெமிலி, அரக்கோணம் ஆகிய 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள்‌ ஓய்வூதிய திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், முதிர்கன்னிகள் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை நகலை ஒப்படைத்து, விலையில்லா வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்