கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
உளியநல்லூரில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெமிலியை அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் நேற்று கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதேவி, கால்நடை ஆய்வாளர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு தடுப்பூசி, பசு மற்றும் எருமை மாடுகளுக்கு செயற்கை முறை கருத்தரிப்பு, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கம் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவையும் வழங்கப்பட்டது.