பணகுடியில் கால்நடை மருத்துவ முகாம்

பணகுடியில் கால்நடை மருத்துவ முகாமை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-27 20:53 GMT

பணகுடி:

பணகுடியில் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, நெல்லை ஆவின் சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மண்டல துணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர், மாவட்ட துணை பதிவாளர் (பால்வளம்) சைமன் சார்லஸ், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை விவசாயிகளுக்கு துணை நிற்பார். பாலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. பால் உற்பத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியும், நுகர்வோர் பயன்பெறும் விதமாக 3 ரூபாய் குறைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளது. ராதாபுரம் தொகுதியில் 10 கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. அங்கு கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடு இன்றி இருப்பு வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதன்பின்னர் சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு சபாநாயகர் பரிசுகள் வழங்கினார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் திருநாவுக்கரசு, யோகிராஜ், பிரியா, அனிதா உள்பட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆவின் விற்பனை மேலாளர் அனுஷா சிங், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்