வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வந்தன.

Update: 2023-07-18 12:09 GMT

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வந்தன.

மகளிர் உரிமை தொகை திட்டம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் 70 கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து 20-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு வினியோகம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் வினியோகம் செய்ய விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடக்கிறது. கடைகளுக்கு விண்ணப்பங்கள் சென்றவுடன் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்