வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரெயில் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-24 06:54 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் வெளி மாவட்ட, வெளி மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொள்வார்கள்.

குறிப்பாக கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாகை மற்றும் கீழ்வேளூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு மட்டும் 29-ந் தேதி அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா நடைபெற உள்ளதை ஒட்டி, அதற்கு முந்தைய நாள் தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 28ம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் 29ம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30க்கு தாம்பரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்