கத்திப்பாரா சுரங்கப்பாலத்தில் சிக்கிய வாகனம் - 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை கத்திப்பாரா சுரங்கப்பாலத்தில் சிமெண்ட் கலவை வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-23 04:39 GMT

கத்திப்பாரா,

சென்னை கத்திப்பாரா சுரங்கப்பாலத்தில் சிமெண்ட் கலவை வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மயிலாப்பூரில் இருந்து கிண்டி தொழிற்பேட்டைக்கு சிமெண்ட் கலவையுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது.

கிண்டி செல்வதற்காக கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் செல்லாமல் கத்திப்பாரா பூங்கா பகுதி வழியாக உள்ள சுரங்கப்பாலம் வழியாக வாகனம் செல்ல முயன்றது. அப்போது சுரங்கப்பாலம் மேல்தடுப்பில் சிக்கிக் கொண்டு பாதி வழியிலேயே நின்றது.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வாகனம் பின்னோக்கி எடுக்கப்பட்டது. அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்