குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனை

நாமக்கல் அருகே குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-03 00:15 IST

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொது வினியோகத்திட்ட ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

அதன்பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுரைப்படி நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறை சோதனைசாவடிகளிலும், மற்ற எல்லைப்பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சோதனை சாவடியில் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்