வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு

Update: 2023-10-15 16:06 GMT


மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக திருப்பூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. கிலோக்கு ரூ.20 வரை அதிகரித்து விட்டது.

காய்கறிகள்

திருப்பூர் புறநகர் பகுதிகளான பல்லடம், பொங்கலூர், அலகுமலை மற்றும் கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். காய்கறி வரத்து அதிகமாக இருக்கும் போது விலை குறைவாகவும், வரத்து குறைவாக இருக்கும்போது விலை அதிகமாகவும் உள்ளது. அதன்படி திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்து விட்டது. வரத்து குறைவு காரணமாக விலை அதிகமாக காணப்பட்டது.

அதன்படி நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை வருமாறு: (கிலோ) ரூ.60-க்கு விற்கப்பட்ட அவரை சாதா ரூ.80-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட பட்ட அவரை ரூ.120-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட , நாட்டு அவரை ரூ.120-க்கும் விற்னையானது.

ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் ரூ.80-க்கும், ரூ.40-க்கு விற்பனையான வரிகத்தரிக்காய் ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பவானி கத்தரிக்காய் ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்பனை பெய்யப்பட்ட பீன்ஸ் ரூ.120-க்கும், கேரட் ரூ.60-க்கும், சின்ன வெங்கயாம் ரூ.100-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும் சாதா உருளை ரூ.30-க்கும், ஊட்டு உருளை ரூ.60-க்கும் விற்பனையானது.

பச்சை மிளகாய்

மேலும் ரூ.40-க்கு விற்பனையான புடலை ரூ.60-க்கும், ரூ.60-க்குவிற்பனை செய்யப்பட்ட பீர்க்கன்காய் ரூ.80-க்கும், ரூ.50-க்கு விற்பனையான பீட்ரூட் ரூ.70-க்கும், ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கோஸ் ரூ.30-க்கும், ரூ. 60-க்கு விற்பனையான பாகற்காய் ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்பனையான புது இஞ்சி ரூ.130-க்கும், ரூ.60-க்கு விற்பனையான முருங்கை ரூ.100-க்கும், சவ்சவ் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்