ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் காய்கறி விலை குறைந்தது; சின்ன வெங்காயம் கிலோ ரூ.65-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.65-க்கு விற்பனையானது.

Update: 2023-08-05 21:53 GMT

ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.65-க்கு விற்பனையானது.

சின்ன வெங்காயம்

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது. அங்கு சுமார் 700 கடைகள் உள்ளன. தாளவாடி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தாராபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் 100 டன்னுக்கு அதிகமான காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விளைச்சல் குறைந்ததன் காரணமாக காய்கறி வரத்தும் குறைந்தது. இதன் எதிரொலியாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக ரூ.160 வரை விற்பனையானது.

விலை குறைந்தது

இந்தநிலையில் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகமானதை தொடர்ந்து விலை சற்று குறைந்து உள்ளது. நேற்று சுமார் 120 டன் காய்கறி வந்தது. இதனால் காய்கறியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை குறைந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் நேற்று ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம் ரூ.70-க்கு விற்ற கத்தரிக்காய் நேற்று ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.30-க்கும், ரூ.40-க்கு விற்ற முள்ளங்கி ரூ.20-க்கு விற்பனையானது.

ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

கேரட்- ரூ.80, பீட்ரூட்- ரூ.60, கருப்பு அவரை- ரூ.100, பட்டை அவரை- ரூ.60, புடலங்காய்- ரூ.40, பீர்க்கங்காய்- ரூ.50, பாகற்காய்- ரூ.50, வெள்ளை பூசணி- ரூ.30, சிகப்பு பூசணி- ரூ.20, முட்டைகோஸ்- ரூ.20, முருங்கைக்காய்- ரூ.30, சுரைக்காய்- ரூ.20, பீன்ஸ்- ரூ.100, காலிபிளவர்- ரூ.40, உருளைக்கிழங்கு -ரூ.40, பெரிய வெங்காயம்- ரூ.25, பச்சை மிளகாய்- ரூ.60, குடை மிளகாய்- ரூ.90, பழைய இஞ்சி- ரூ.250, புதிய இஞ்சி- ரூ.150, வெண்டைக்காய்- ரூ.30, கருணைக்கிழங்கு- ரூ.120, சேப்பங்கிழங்கு- ரூ.80

Tags:    

மேலும் செய்திகள்