வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-06-07 19:04 GMT

புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், செல்லியம்மன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், பெரியாண்டவர், பேச்சியம்மன், கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் புனரமைக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் நாடிசந்தனம், தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து 9.40 மணிக்கு வரதராஜபெருமாள் கோவில், 9.55 மணிக்கு பெரியாண்டவர் பேச்சியம்மன் கோவில், 10.05 மணிக்கு செல்லியம்மன் கோவில் விமானகலசங்களுக்கும், 10.30 மணிக்கு அனைத்து மூலஸ்தான சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 11.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை கார்த்திகேயன் குருக்கள் நடத்தி வைத்தார். விழாவில் கீழரசூர், ஆமரசூர், தென்னரசூர்மால்வாய், சரடமங்கலம், கருடமங்கலம், தாப்பாய், சாதூர்பாகம், அலுந்தலைப்பூர், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, சன்னாவூர், வெங்கனூர், ஆங்கியனூர், மேலரசூர், கல்லக்குடி, கல்லகம், கோக்குடி, பூண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள், திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்