வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-06-25 19:50 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ தேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கோபுர கலசங்களுக்கும், மூலஸ்தானத்தில் தேவி, பூதேவி, வரதராஜ பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றினர். அதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர் தேவி, செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பந்தல்குடி போலீசார் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்