வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

Update: 2022-08-27 19:00 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னா (வயது 45). இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறியும், பீரோக்கள் திறந்து இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

இரவு நேரத்தில் வீடு பூட்டப்பட்டிருந்ததை அறிந்த மர்மநபர்கள் மாடி வழியாக பீரோ இருந்த அறைக்கு சென்று அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடிச்சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து நகர போலீஸ் நிலையத்தில் முன்னா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்