வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கீழக்கோட்டையூர் சங்கோதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேவதி (வயது 35). இவர் வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், ரேவதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து ரேவதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.