லாரி மீது வேன் மோதல்; 13 அய்யப்ப பக்தர்கள் படுகாயம்

லாரி மீது வேன் மோதியதில் 13 அய்யப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2022-11-25 21:10 GMT

பெரம்பலூர்,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, வைரபுரதை சேர்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி சுலோச்சனா(வயது 52). இவர் தனது உறவினர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்தார். பின்னர் அவர்களுடன் அய்யப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா வேனில் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக வேனில் அவர்கள் புறப்பட்டனர்.

வேனை அதே பகுதியை சேர்ந்த ராஜா (40) என்பவர் ஓட்டியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே வேன் வந்தது.

13 படுகாயம்

அப்போது அதே சாலையில் வேனுக்கு முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர் எவ்வித சமிஞ்கையும் செய்யாமல் திடீரென லாரியை வலது புறத்தில் இருந்து இடது புறம் திருப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறிய சுற்றுலா வேன் அந்த லாரி மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 19 அய்யப்ப பக்தர்களில் சுலோச்சனா உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். வேன் டிரைவர் ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்