வால்பாறை காமராஜா் நகரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

வால்பாறை காமராஜா் நகரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

Update: 2022-07-23 15:02 GMT

வால்பாறை

வால்பாறை காமராஜா் நகரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள்

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் தபால் நிலையம் அருகில் இருந்து பி.ஏ.பி காலனி பகுதி வரை உள்ள சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலையும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களின் கழிவுநீர் சாலையில் செல்கிறது. பலருடைய வீட்டு கட்டுமான பொருட்கள் எல்லாம் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருப்பதால் மழை பெய்யும் சமயத்தில் கற்கள் எல்லாம் மழைத் தண்ணீரில் அடித்துச் சென்று சாலையில் குவிந்து விடுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

சுகாதார சீர்கேடு

குடியிருப்பு பகுதியில் உள்ள பலரது வீடுகளின் சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நின்று சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. வால்பாறை போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்து வருகிறது. எனவே அரசு அதிகாரிகள் காமராஜர் நகர் சாலையில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்