வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு

சிவகிரியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-08-17 17:22 GMT

சிவகிரி:

சிவகிரியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகர பா.ஜனதா சார்பில் காந்திஜி கலையரங்கம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர பா.ஜனதா தலைவர் ஒருசொல்வாசகன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றிய துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராமராஜ், சக்திவேல், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சேட்குமார், வடக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் புருஷோத்தமன், ஊரக மேம்பாட்டு துறை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, ஒன்றிய கிளைத் தலைவர்கள் மாரியப்பன், காளைப்பாண்டியன், நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்