வடமாடு ஜல்லிக்கட்டு; 9 பேர் காயம்

வடமாடு ஜல்லிக்கட்டு; 9 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-02-26 19:00 GMT

ஆலங்குடி அருகே மாங்கோட்டை காளியம்மன் கோவிலில் சந்தனகாப்பு விழா நடைபெற்றது. விழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு மாங்கோட்டை காளியம்மன் கோவில் திடலில் நேற்று நடைபெற்றது. இதில், மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் 99 பேர் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடிக்கினர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், வெள்ளி காசு, குத்து விளக்கு, மின்விசிறி, செல்போன் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வடமாடு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்