வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கும் வள்ளலாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிந்திருந்தனர்.

Update: 2023-02-05 02:40 GMT

கடலூர்,

உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமம். எல்லோரும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தி ஞானியாக விளங்கியவர் வள்ளலார் ஆவார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றும், மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உணக்குள்ளே இருக்கும் ஜோதியை காண வேண்டும் என்பதை உணர்த்திய வல்லளாரின் ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இவர் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த வள்ளலாரை தரிசனம் செய்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருப்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று முழக்கமிட்டு வணங்கினர்.

ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கும் வள்ளலாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிந்திருந்தனர்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்