எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை

சித்திரை 18-ம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டது.

Update: 2023-04-30 19:48 GMT

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 18-ம் பெருக்கு திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கோசாலையில் உள்ள கோபாலகிருஷ்ணருக்கு பூர்ணாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 8 மணிக்கு மாயாண்டி சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு ஆதிசிவபெருமானுக்கு பசும்படைப்பு பூஜை நடந்தது.

நேற்று மதியம் 12 மணிக்கு எட்டெழுத்து பெருமாளுக்கும், பெரிய பிராட்டி, இளையபெருமாள், ஆத்தியப்ப சுவாமி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் பூர்ணாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும், மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு ராமதூத பக்த வீரஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்கார பூஜையும் நடந்தது. சித்திரை 18-ம் பெருக்கு விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை, காலை 10 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், பெரியபிராட்டி தாயார் சிறப்பு திருக்காட்சி பூஜை மற்றும் அய்யாவின் சிவிகை உலா, கருடசேவை நடக்கிறது. பகல் 12 மணிக்கு கோசாலையில் சிறப்பு அன்னலிங்க பூஜையும், அன்னமுத்திரை தர்ம பூஜையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அன்னமுத்திரை அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிவசுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அரண்மனை பூஜை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்