தோல் கழலை நோய் அறிகுறி தென்பட்டால் தடுப்பூசி போட வேண்டும்

கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ெதரிவித்துள்ளது.

Update: 2023-01-14 19:21 GMT


கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ெதரிவித்துள்ளது.

கழலை நோய்

வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தோல் கழலை நோய் பரவி அங்குள்ள கால்நடைகளை தாக்கி அதிக அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் வடக்கு மாவட்டங்களில் கால்நடைகளை தாக்கி உள்ளது. இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும். உன்னிகள் மற்றும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரப்பப்படுகிறது.

நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும். இந்த நோயானது சிறு கன்றுகள் முதல் கறவை மாடுகள் வரை அனைத்தையும் தாக்கக்கூடியது மேற்கொண்டு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

தடுப்பூசி

அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையினர் குழுக்கள் அமைத்து நோய் நிலைமை குறித்தும், நோய் கிளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்டத்திற்கு ஒரு லட்சம் தோல் கழலை தடுப்பூசி வந்துள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையினர் பஞ்சாயத்து தலைவருடன் இணைந்து முன் அறிவிப்பு செய்து இந்நோய்க்கான தடுப்பூசியினை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசிக்குழுவினர் வருகை தரும் போது தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசியினை போட்டுக் கொள்ளவும் பிறருக்கும் அறிவுறுத்த வேண்டும்.

வேண்டுகோள்

அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போட்டுக் கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கவும் 21 நாட்கள் கழித்தபிறகு கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். அதற்குள் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது அவசியம்.

தங்கள் பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அத்துடன் கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்