பேரூராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்

பேரூராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.;

Update:2022-05-29 23:17 IST

கரூர், 

சங்க மாநாடு

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் கரூர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகாலிங்கம், மாநிலத்தலைவர் உமாராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் பேரூராட்சி அலகில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். புதிதாக ஓட்டுனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

பதவி உயர்வு

குடிநீர் திட்ட பணியாளர்களின் ரூ.1,300 தர ஊதியத்தை ரூ.1,900-ஆக உயர்த்தி வரப்பெற்ற அரசாணையை உறுதிப்படுத்தி தரஊதியத்தை குறைக்கப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். பேரூராட்சிகளில் கீழ்நிலை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வினை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்