உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை
உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை நடந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் நந்திக்கு மேல் பகுதியில் காலச்சக்கரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இதுதவிர ராகு, கேதுக்கு தனியாக சன்னதி அமைந்து உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ராகு, கேது பரிகார பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று ராகு, கேது பரிகார சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.