துணி பைகளை பயன்படுத்த வேண்டும்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணி பைகளை பயன்படுத்த வேண்டும்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஒரு வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிவகாசி 28-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் சூர்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் வெயில்ராஜ் செய்திருந்தார்.