தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-11-22 18:45 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "ஸ்டெர்லைட் ஆலையில் பலர் பல வருடங்கள் வேலை பார்த்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுற்று வட்டார பகுதி மக்கள் கல்விக்கு உதவி செய்து வருகின்றனர். கிராம பகுதிகளில் மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொண்டு உள்ளனர். ஆகவே, வதந்திகளை நம்பாமல் ஆலையை திறக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லை. 13 பேர் இறப்புக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறி உள்ளது. ஆகையால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் வாழ்வாதாரம் சிறக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும"் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்