அப்பர் சுவாமிகள் திருக்கட்டமுது விழா

அப்பர் சுவாமிகள் திருக்கட்டமுது விழா நடந்தது.

Update: 2023-05-15 19:43 GMT

பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அப்பர் என்ற திருநாவுக்கரசர் சுவாமிகளின் அவதார விழாவும், திருக்கட்டமுது விழாவும் நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு பிரகாரத்தில் உள்ள அப்பர் சன்னதியில் சைவநெறிக்குரவர்கள் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர், சேக்கிழார் திரு உருவங்களுக்கு அபிேஷகமும், திருக்கட்டமுது நிவேதனமும் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. இதில் தின வழிபாட்டுக்குழுவினர், பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அபிஷேக, ஆராதனைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் திருஞானம் மற்றும் தெய்வீகப்பேரவையின் தின வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்