மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்றது.

Update: 2023-08-06 21:27 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி, சேத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்றன.

முகாமினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- ராஜபாளையம் பகுதியில் மொத்தம் 50,745 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக 38,341 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்திட்டம் மகளிர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தகுதி உடைய அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது செயல் அலுவலர் சந்திரகலா, பேரூராட்சி தலைவர்கள் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், துணைத்தலைவர் காளீஸ்வரி, ஒன்றிய செயலாளர் குமார், பேரூர் செயலாளர் இளங்கோ மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்