தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மையம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அவசரகால செயல்பாட்டு மையம் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது

Update: 2024-08-22 07:21 GMT

சென்னை,

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அதனை தற்போது ரூ.5.12 கோடி செலவில் 10 ஆயிரம் சதுரடியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த மையத்தை 1070 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்